‘என்னா அடி’ஒரு சதத்தின் மூலம் உடைக்கப்பட்ட பல சாதனைகள்! துவங்கியது சுப்மன் கில் காலம்….

214
Advertisement

மும்பை அணியை வீழ்த்திய குஜராத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளது, இந்த போட்டியில் கில் அடித்த அதிரடி சதம் GT-யின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, எனவே இந்த ஒரு சதம் வழியாக கில் தற்போது பல சாதனைகளை உடைத்துள்ளார்.


60 பந்துகளில் 129 ரன்களை குவித்த கில், 10 சிக்ஸர்களும், ஏழு பவுண்டரிகளை அடித்து விளாசினார், இதனால் ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ரன்கள் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இதற்கு முன்னால் கடந்த 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய ஷேவாக் 122 ரன்கள் அடித்திருந்தது சாதனையாக இருந்தது. அதுபோல பிளே ஆஃப் சுற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்திருக்கிறார்.


இதற்கு முன் விரேந்திர ஷேவாக், சாஹா, கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்து இருந்தனர். இப்போது 10 சிக்ஸர்கள் அடித்து அந்த ரெக்கார்டுகளை தாறுமாறாக உடைத்திருக்கிறார் சுப்மன் கில்.
மேலும் ஐ,பி.எல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் லிஸ்டில் சுப்மன் கில் தற்போது 3ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 2016-ல் 973 ரன்களை அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.


அதேபோல பிளே ஆஃப் சுற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் பெற்றுள்ளார், கடைசியாக விளையாடிய நான்கு ஐபிஎல் ஆட்டத்தில் சுப்மன் கில் மூன்று சதம் அடித்திருக்கிறார். மேலும் ஒரு சீசனில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, ஜாஸ் பட்லருக்கு பிறகு சுப்மன் கில் 3 ஆவது இடம் பிடித்திருக்கிறார்.


எனவே கில் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை நடக்கப்போகும் இறுதிப்போட்டியில் வெளிப்படுத்தினால், சி.எஸ்.கேவிற்கு ஆபத்தாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இது குறித்த உங்களது கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்.