சேலம் காவல் கோட்டத்தில், ஏராளமான காவலர்கள் மண்டலம் வாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் எஸ்ஐக்களாக பணியாற்றி வந்த 240 பேருக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கி பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மண்டலம் வாரியாக உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சேலம் காவல் சரகத்தில் எஸ்.ஐ யாக பணியாற்றி வரும் கேசவன், சிபிசிஐடிக்கும், அந்தோணி, மைக்கேல், சதீஷ்குமார், கருணாநிதி மற்றும் தாமரைச்செல்வன் ஆகியோர் சேலம் மேற்கு மண்டல இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
