பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்துக்கு மன்சூர் அலிகான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிற மாநிலத்தவருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தரக்கூடாது என வலியுறுத்தி சென்னை எழும்பூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
