நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் இன்று ‘இண்டஸ்ட்ரியல் லா’ பாடத்தின் தேர்வு நடக்க இருந்தது.
வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து தேர்வு கட்டுப்பாட்டாளர் தேர்வை தற்காலிகமாக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பல்கலைக்கழக தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது.