Monday, January 19, 2026

மணிப்பூரில் மீண்டும் கலவரம்…எஸ்.பி அலுவலகம் மீது கல் வீச்சு

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்து அங்கு வசிக்கும் மெய்தி, குக்கி இன மக்கள் இடையே இனக்கலவரம் நிகழ்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது. மாவட்ட எஸ்.பி., அலுவலகம் மீது அவர்கள் கற்களை வீசி தாக்கியதில் அங்கு பணியில் இருந்த பலர் காயம் அடைந்தனர். உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் கடும் சேதம் அடைந்தன.

அண்மையில், நிருபர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பைரன் சிங், மணிப்பூர் மாநில நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மன்னிப்பு கேட்ட நிலையில் தற்போது மீண்டும் கலவரம் அரங்கேறியுள்ளது.

Related News

Latest News