மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான திரைப்படம் தக் ஃலைப். இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா. அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தது.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் வசூலில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ”தக் லைப்” படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இயக்குனர் மணிரத்னம் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசினார்.
அவர் கூறுகையில், “ரசிகர்கள் ”நாயகன்” படத்தைப்போன்று எதிர்பார்த்ததால் ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. எங்கள் இருவரிடமிருந்தும் இன்னொரு நாயகனை எதிர்பார்த்தவர்களுக்கு, நான் சொல்லக்கூடியது என்னவென்றால், எங்களை மன்னித்துவிடுங்கள்” என்றார்.