Thursday, July 31, 2025

ரயிலில் சீட் தர மறுத்த பயணியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங், டெல்லி-போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அங்குள்ள பயணி ஒருவரிடம் இருக்கையை மாற்றுமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த பயணி மறுத்துள்ளார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜான்சி நிலையத்தில் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அந்த பயணியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், “பயணிகள் தவறாக நடந்துகொண்டனர், என் குடும்பத்தினரை அவமதித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தாக்கப்பட்ட பயணி இதுவரை அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News