Wednesday, March 12, 2025

ஆறு மாத குழந்தையை கொன்ற கூலித் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஓசூர் அருகே, ஆறு மாத குழந்தையை கொன்ற கூலித் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன்(40). கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்தார். இதில், தனது மகன் முனியப்பன் போலவே இருப்பதால், வருங்காலத்தில் முனியப்பனின் மனைவியிடம் மகன் சொத்தை பிரித்து கேட்பான் என வரலட்சுமி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன், வரலட்சுமியின் 6 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முனியப்பனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Latest news