சென்னை துரைப்பாக்கத்தில் மது அருந்த அழைத்து செல்லப்பட்ட பிளம்பர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் பிளம்பர் அன்பு கணபதி. இவர் ராஜதுரை என்பவர் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கைவிடுமாறு ராஜதுரை பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், அன்பு கணபதியை மது அருந்துவதற்காக ராஜதுரை தனது இருசக்கர வாகனத்தில் பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து, அன்பு கணபதி ரத்தம் சொட்ட சொட்ட கல்லுக்குட்டை எம்ஜிஆர் சிலை அருகே நின்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் அன்பு கணபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த தரமணி போலீசார், கொலையாளி ராஜதுரையை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
