வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம் சந்தர் என்ற நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ரேபிஸ் நோயால் ஆண்டுக்கு 65,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவிலும் ரேபிஸ் நோய் உயிரிழப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. நாய் மட்டுமன்றி பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் இந்த நோய் ஏற்படுகிறது.
இந்நிலையில் ரேபிஸ் அறிகுறியுடன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.