அசால்ட்டாக ராஜ நாகத்தை குளிப்பாட்டி விட்ட நபர்! வைரலாகும் வீடியோ

64
Advertisement

வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தை வட்டம் அடிப்பது வாடிக்கை.

அது போலத் தான் தற்போதும் குளியலறையில் பெரிய ராஜ நாகத்தை ஒரு நபர் எந்த வித தயக்கமும் பயமும் இல்லாமல் குளிப்பாட்டி விடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

22 நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதை பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பாம்பை இப்படி பயமே இல்லாமல் குளிப்பாட்டி விடுகிறாரே என பல நெட்டிசன்கள் வியந்து கருத்துக்களை பதிவு செய்ய, இது போன்ற செயல்கள் பாதுகாப்பற்ற நடவடிக்கையை ஊக்குவிப்பதாக சிலர் கமண்ட்களில் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.