கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பாலராமபுரம் பகுதியை சார்ந்த ஸ்ரீது – ஸ்ரீ கிஸ் தம்பதியினரின் மகள் இரண்டரை வயதான தேவஇந்து. இந்தக் குழந்தை காணாமல் போனதாக இன்று காலை நெய்யாற்றுக்கரை காவல் நிலைய போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. தொடர்ந்து குழந்தையை தேடும் பணியில் போலீசாரும் – தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டபோது அருகிலுள்ள கிணற்றிலிருந்து இரண்டரை வயதான குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.
சிறு குழந்தை என்பதால் கிணற்றின் மேல் ஏறி கிணற்றுக்குள் குதிக்க வாய்ப்பு இல்லை – என போலீசார் சந்தேகத்துள்ளனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் சுவாச குழாயில் தண்ணீர் நிறைந்து மூச்சு முட்டி இறந்தது தெரியவந்தத்த்து. தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் அனைவரையும் விசாரித்து வந்துள்ளனர்.
பல கட்ட விசாரணைக்கு பின்பு தாய் ஸ்ரீதுவின் அண்ணனும்,அந்தக் குழந்தைக்கு மாமாவுமான ஹரிகுமார் தான் கொலை செய்துள்ளதாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹரிகுமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்காக பணமாகவும் மற்ற உதவிகளுக்காகவும் தனது சகோதரி நாடி உள்ளார். சகோதரி அதற்கு உதவி எதுவும் செய்யாததால் சகோதரி மேல் ஹரிகுமாருக்கு கோபம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தான் நேற்றைய தினம் சகோதரியின் மேல் உள்ள கோபத்தின் காரணமாக அவர்களின் இரண்டரை வயது பெண் குழந்தையான தேவ இந்து தூங்கி கிடக்கும்போது எடுத்து கிணற்றுக்குள் போட்டதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.