மும்பையில் பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக உள்ளே புகுந்த மர்ம நபர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து சயிப் அலிகானை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் சயிப் அலிகானை குத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.