Wednesday, December 24, 2025

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த நபர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகள், வீடு செல்வதற்காக வழக்கம்போல் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றனர். அப்போது 55 வயது மதிக்கத்தக்க நபர், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாணவிகள் கூச்சல் போட்டதால், மர்மநபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அந்த நபரை விரட்டி சென்று பிடித்தனர். இதனையடுத்து உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், அவர் ஒப்படைக்கப்பட்டார்.

Related News

Latest News