கர்நாடக மாநிலத்தில் நவீன் என்ற நபர், வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி சீரியல் நடிகை ஒருவருக்கு தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
அந்த நபரை நடிகை ‛பிளாக்’ செய்தாலும் தொடர்ந்து வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதனால் பொறுமை இழந்த அந்த நடிகை ஒரு உணவகத்திற்குச் சந்திப்பதாகக் கூறி அவரை வரவழைத்து நேரடியாகக் கண்டித்தார். ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டார்.
இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். நடிகையின் புகாரை அடுத்து போலீசார் நவீனை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
