சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி J16 அரசு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது இங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் கல்லை எடுத்து பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் அலெக்சாண்டர் (53) நடத்துனர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பேருந்து கண்ணாடியை உடைத்த நபரை பிடித்து கோயம்பேடு K10 காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அந்த நபர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பிரசாந்த் (39) என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.