கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு உடல் நிலை சரியில்லை எனவும், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து மம்முட்டியின் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
“இது பொய்யான செய்தி. அவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பதால்தான் விடுப்பு எடுத்திருக்கிறார். அதனால்தான் படப்பிடிப்புகளிலிருந்து ஒரு இடைவெளி எடுத்திருக்கிறார். இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பர் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.