Tuesday, January 27, 2026

ரூ.15 கோடி சம்பளம்? திரிஷா, நயன்தாராவை ஓரங்கட்டிய மமிதா பைஜு!!

பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜு. இவர் தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் இவர் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே விஜய்யுடன் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது. இந்த நிலையில்,இவரது திரைப் படங்கள் வெற்றி பெறுவதால் மமிதா பைஜு ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மமிதா பைஜு.

இந்த குறித்து அவர், “சமூக ஊடகங்களில் நான் ரூ.15 கோடி சம்பளம் பெறுவதாக செய்திகள் பரவி வருகின்றன. நான் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனால், அந்தச் செய்திகளைப் பார்த்து உண்மையில் ஆச்சரியமடைந்தேன். சிலர் அதன் உண்மைத் தன்மையை அறியாமல், நம்புகிறார்கள்.

ரூ.15 கோடி சம்பளம் பெருமளவுக்கு பெரியவராகிவிட்டாரா என்று சிலர் அதற்கு கருத்து தெரிவித்திருந்தார்கள். சமூக ஊடகங்களில் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று விளக்கமளித்துள்ளார்.

Related News

Latest News