காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மல்லிகார்ஜூன கார்கேவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.