உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் மழை, வெள்ளத்தில் தாராலி என்ற கிராமத்தின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மாயமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் உத்தரகாண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 163 சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள், ஏழு மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் இரண்டு எல்லைச் சாலைகள் அடங்கும்.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.