Monday, August 11, 2025
HTML tutorial

இன்பாக்ஸில் குவியும் தேவையற்ற மெயில்..கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்

கூகுள் ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது ஜிமெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

இது, இன்பாக்ஸில் குவியும் நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியிலான தேவையற்ற மின்னஞ்சல்களை “மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன்” எனும் புதிய டேப் கீழ் ஒருங்கிணைத்து, அவற்றை எளிதில் கண்டறிந்து நீக்கவோ அல்லது வகைப்படுத்தவோ உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பயனர்கள் தேவையற்ற மின்னஞ்சல்களை பில்டர் செய்து, முக்கியமான மின்னஞ்சல்களை மட்டும் விரைவாக பார்க்க முடியும்.

உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ள நிலையில், இந்த புதிய வசதி ஜிமெயில் பயன்படுத்துவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News