Monday, December 29, 2025

மோசமான நிலையில் மகளிர் விடியல் பேருந்து? : தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசின் மகளிர் விடியல் பேருந்து நொறுங்கிய நிலையில் செல்வது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாவட்டம் சட்டகல்புதூர் செல்லும் மகளிர் விடியல் பேருந்தின் பின்பக்கம் லாரி மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து, இப்பேருந்து பணிமனைக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்றும் வதந்தியை பரப்பாதீர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News