தமிழ்நாடு சட்டசபையில் மகளிர் உரிமைத் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஒவ்வொரு மாதமும் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மகளிருக்கும் தற்போது வரை ரூ.26ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை கோரி புதிதாக இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகை கோரி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பரிசீலனை செய்யப்பட்டு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
