மகளிர் உரிமைத்தொகை : வீட்டுக்கே தேடி வரும் விண்ணப்பம்

சென்னையில் மகளிர் உரிமைத்தொகை பெற முதல்கட்டமாக ஆறு வார்டுகளில் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது.

மாநகராட்சியில் உள்ள, 25, 38, 76, 109, 143, 168 ஆகிய ஆறு வார்டுகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் 15 ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காக, அந்த வார்டுகளில் தன்னார்வலர்கள் இன்று வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் வழங்கினர்.

ஒவ்வொரு வார்டிலும் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை தலா இரண்டு முகாம்கள் வீதம் 400 முகாம்கள் நடத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று வழங்கும் விண்ணப்ப படிவத்தில் 13 அரசு துறைகள் வழியாக கிடைக்கும் 43 சேவைகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News