சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 காவலர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வலக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.