பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு – இன்று மீண்டும் விசாரணை

133

அதிமுக – பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அதிமுக-வின் பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

Advertisement

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ்.தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவசர வழக்காக மனுவை விசாரிப்பதற்கு நிர்ப்பந்திக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, பொதுக்குழு விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.