சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத் பதவியேற்றார். இவர் பல்வேறு வழக்குகளை கையாண்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் நீதிபதி சத்தியநாராயண பிரசாத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இறப்பு நீதிபதிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.