தற்போது எங்க பார்த்தலும் “இவங்க தான்ப்பா” என்ற அளவிற்கு இருப்பார்கள் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா. பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில் தான் அண்மையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும், தனியார் youtube சேனலுக்கு பேட்டியும் அளித்துவந்துள்ளர். இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் தாக்கல் மனு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “ஜாய் கிரிசில்டா அவதூறாக பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். தனது கேட்டரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவுக்கு எதிராக அவதூறு பரப்பு கருத்துக்களை பேச ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரங்கராஜ் உடனான தகராறில் அவர் பார்ட்ரனாக உள்ள மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசியதாக ஜாய் கிரிசில்டா மீது அந்த நிறுவனம் புகார் அளித்துள்ளது.
மேலும், ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசியதால் 15 நாளில் ரூ.12.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.மாதம்பட்டி ரங்கராஜ் பார்ட்னராக உள்ள மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் அவரை பாதுகாப்பதாக ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தற்போது இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
