மருத்துவர்கள் – 4,000 காலி பணியிடங்கள்

310

தமிழக சுகாதாரத்துறையில், மருத்துவர்களுக்கான பணியிடங்களில், 4 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் விபத்து அதிகமாக நடைபெறும் 500 பகுதிகளை கண்டறிந்து அதனை சுற்றி 640 மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை அளிக்க புதிய மருத்துவ திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் வெளிப்படையாக நடைபெறுவதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறையில், மருத்துவர்களுக்கான பணியிடங்களில், 4 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதனை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.