Thursday, July 31, 2025

இசைஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையாராஜா இன்று தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சியினர், திரைப்பலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

தங்களின் Symphony இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2ஆம் நாளுக்காக கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான் என்றும் முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News