கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சஞ்சீவ். இவர் தனது சொகுசுகாரை சாலையில் ஓட்டி சென்ற போது, அதனை மக்கள் கண்கொட்டாமல் கண்டு ரசித்தனர். அப்போது அந்த கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
என்ஜினில் இருந்து பற்றியெரிந்த தீ, மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது. நடுரோட்டில் சொகுசுகார் தீப்பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.