நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதற்கு L2 எம்புரான்’ என பாயை வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் நாளை ( மார்ச் 27) வெளியாகவுள்ளதால் கேரளத்தில் பல திரையரங்குகளில் டிக்கெட்கள் முன்பதிவு வாயிலாக விற்றுத்தீர்ந்துள்ளன.
இந்த நிலையில், லூசிஃபர் 2: எம்புரான் முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முன்பதிவில் மட்டுமே ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மலையாள சினிமாவில் முன்பதிவில் அதிக வசூல் செய்த முதல் படம் இதுவாகும்.