மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் ஜொலிக்கவில்லை. இதனால் மைதானத்தில் வைத்தே அணி உரிமையாளர் கோயங்கா, பண்டினை எண்ணெய் சட்டியில் போடாத குறையாக வறுத்தெடுத்து விட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக, ”இந்த கோயங்காவை மொதல்ல தடை பண்ணுங்க”, என்று ரசிகர்கள் அவரைக் கழுவி ஊற்றி வருகின்றனர். இதற்கிடையில் 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப், விரைவில் கேப்டன் பதவியை விட்டு விலகுவார் என்று கூறப்படுகிறது.
தோல்விக்குப் பின்னர் மைதானத்தில் வைத்து தன்னைத் திட்ட வேண்டாம் என்று ரிஷப், ஆலோசகர் ஜாகீர்கான் மூலமாகத் தூது அனுப்பினாராம். ஆனால் கோயங்காவோ, ”நன்றாக ஆடவில்லை என்றால் சொல்லத்தான் செய்வேன். என்னை மாற்றிக்கொள்ள முடியாது,” என்று ஒரேயடியாக மறுத்து விட்டாராம்.
இதனால் ரிஷப் நிலைமை தற்போது ‘கம்பி மேல் நடப்பது போல’ Danger ஆக மாறியுள்ளது. ரிஷப் பண்டிற்கு பதிலாக பவர்ஹிட்டர், நிக்கோலஸ் பூரானை கேப்டனாக்கி விடலாம் என்று, கோயங்கா Plan செய்து விட்டாராம்.
எனவே விரைவில் லக்னோ அணியில் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முன்னதாக ரிஷப் பண்டினை ஏலத்தில் எடுத்தபோது, அவரை வைத்து 5 IPL கோப்பைகளை வெல்வோம் என்று, கோயங்கா பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.