18 வருடங்கள் ஆகியும் IPL தொடர் இன்னும் சரிவை சந்திக்காமல், வளர்ந்து கொண்டே செல்வதற்கு காரணம் அது கொடுக்கும் சுவாரஸ்யம் தான். எத்தனை பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் கூட, அறிமுக வீரர்களிடம் எளிதாக வீழ்ந்து விடுகின்றனர்.
இதேபோல கடைசி பந்து வரையும் கூட வெற்றிக்காக போராடுகின்றனர். வெற்றிக்கு 1 சதவீதம் தான் வாய்ப்பு என்னும் நிலையில் இருந்தும் கூட, அணிகள் மீண்டெழுகின்றன. அந்தவகையில் நடப்பு தொடரின் 2 சுவாரஸ்யமான Matchகளிலும், லக்னோ அணியே முக்கிய பங்கு வகித்துள்ளது.
முதல் போட்டியில் 209 ரன்கள் எடுத்திருந்த லக்னோவை அடித்து, டெல்லி அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியில் இந்த தொடரின் 300 ரன்கள் அடிக்கக்கூடிய, ஒரே அணியாக இருக்கும் SRHஐ லக்னோ அசால்ட்டாக வீழ்த்தியுள்ளது.
போட்டிக்கு முன் கேப்டன் ரிஷப் பண்ட், ” அவர்கள் எவ்வளவு ஸ்கோர் அடிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நாங்கள் அதை நிச்சயம் Chase செய்வோம்,” என்று தெரிவித்திருந்தார். சொன்னது போல 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி, ஒட்டுமொத்த இந்தியர்களையும் ‘சைலண்ட்’ ஆக்கிய Pat Cumminsஐ சைலண்ட் ஆக்கியிருக்கிறார்.
இதற்கு ஆல்ரவுண்டர் Lord ஷர்துல் தாகூரே முக்கியக் காரணம். IPL ஏலத்தில் விலை போகாத ஷர்துல் தான் தற்போது Purple Capஐ வைத்திருக்கிறார். இதேபோல அந்த அணி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் Orange Capஐ வசப்படுத்தி உள்ளார்.
இந்தநிலையில் லக்னோ- ஹைதராபாத் இடையிலான போட்டி, கிரியேட்டர்களுக்கு நல்ல கண்டெண்ட் ஆக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் மீம்ஸ் மழையை பொழிந்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த போட்டி நல்லதொரு விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.