Thursday, July 31, 2025

எந்த ராடாரிலும் ‘சிக்காது’ உலகின் ‘விலையுயர்ந்த’ போர் விமானம் ‘யார்கிட்ட’ இருக்குன்னு பாருங்க!

இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளின் சண்டையால் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள, மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இணையத்திலும் இதுகுறித்த தேடல்கள் வெகுவாக கவனம் பெற்று வருகின்றன.

அந்தவகையில் உலகின் மிகவும் விலையுயர்ந்த போர் விமானம் குறித்த, தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் கடற்படையை சேர்ந்த F 35B என்ற போர் விமானம் தான் அது. இதன் விலை இந்திய மதிப்பில் 835 கோடி ரூபாயாகும்.

எந்தவொரு ராடாரிலும் சிக்காதவாறு இந்த போர் விமானம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் இங்கிலாந்தின் விமானம் தாங்கி கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் ஒரு பகுதியாகும், இது தற்போது இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளுக்காக இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ளது. இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் இருந்த, கேரியரில் இருந்து போர் விமானம் புறப்பட்டது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக கப்பலுக்குத் திரும்ப முடியாமல், கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 4 நாட்களாக இந்த போர் விமானம் நின்று கொண்டிருக்கிறது. எப்போது இந்த விமானம் சரி செய்யப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இந்திய விமானப்படை அதிகாரிகள் தற்போது இந்த விமானத்தை, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இந்திய விமானப்படையோ இது வழக்கமான ஒரு திசை திருப்பல் தான் என்று, இந்த போர் விமானம் குறித்து பரவும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அதிவேகத்திற்கு பெயர் பெற்ற இந்த போர் விமானத்தால், ஒரே நேரத்தில் 7000 கிலோ வரையிலான எடையை சுமந்து செல்ல முடியும். உலகின் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றான இது, விமானிகளுக்கு போர்க்களத்தின் முழு காட்சியையும் வழங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News