லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஆமிர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஷ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்த இந்த பான் இந்திய படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த கேரள மக்கள் தங்கள் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
முதல்நாளே படம் பார்த்த ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் கூறியதாவது, “கூலி படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ரஜினி நன்றாக நடித்திருக்கிறார். இருந்தாலும் படம் நார்மல் படம் போலதான் இருக்கிறது. படத்திற்கும் கதைக்கும் எந்தவிதமான தொடர்புமும் இல்லாதது போல இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படம் போலவே இல்லை என தெரிவித்துள்ளார்.
தே படம் பார்த்த மற்றொரு ரசிகர், லோகேஷ் கனகராஜ் ரஜினியை வெச்சு செய்துவிட்டார். தான் ஒரு கமல் ரசிகன் என்பதை நிரூபித்து விட்டார். கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜன் படம் போலவே இல்லை. கடைசியில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கும் போது இது லோகேஷின் படமாக என கேட்கத் தோன்றுகிறது. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றார்.