உடனடியாக லோன் கிடைக்கும் என்ற விளம்பரத்துடன் பல லோன் ஆப்கள் play store இல் கிடைக்கிறது . இப்போதைக்கு பணப்பிரச்சனயை சமாளிக்கலாம் என சிலர் அதுபோன்ற ஆப்பை டவுன்லோட் செய்து பதிவு செய்யும்போது, ஆதார் copy , pan copy போன்ற டீடெயில்ஸ் கேட்பதுடன் செயல்படுவதற்கு சில அனுமதிகளை கேட்கும், அவற்றிற்கு அனுமதி கொடுத்தால் போதும், உடனே கடன் தொகை உங்களது வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.
இதற்க்கு பின்பு தான் கடன் வாங்கியவர் சிக்கலில் மாட்டுவார் . பணம் திரும்ப செலுத்துவதில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் சிக்கல் பெரிதாகிவிடும் . என்ன பண்ணுவாங்கன்னு கேக்கறீங்களா ? உங்கள் மொபைல் போனில் உள்ள உறவினர்கள் ,நண்பர்களுக்கு ஆபாசமான போட்டோக்களை அனுப்புவார்கள் .
அவர்கள் யார் ஏன் உனது பெயரை சொல்லி எனக்கு ஆபாசமான மெசேஜ் கல் வருகிறது என உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை கேட்க துவங்க நீங்கள் தலைகுனிவுக்கு ஆளாக நேரிடும் . போலீஸ் complaint கொடுத்தாலும் பெரிதாக நடவடிக்கை இருக்காது என இந்த துன்பத்தை அனுபவித்தவர்கள் சொல்லுகின்றனர் .
ஆகவே எவ்வளவு பண முடை இருந்தாலும் இதுபோன்ற லோன் ஆப் களிடமிருந்து கடன் வாங்காமல் இருப்பது உத்தமம் .