நடன பிரியர்களை  உறையவைத்த  சிறுமி

278
Advertisement

பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் திறமைகளுடன் தான் பிறக்கிறது.இதனை நிரூபிக்கும் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் உலா வருகிறது.

தற்போது இணையத்தில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோவில்,பெண் குழந்தை ஒன்று உலகம் வியக்கும்விதம் நடனமாடுகிறது.குழந்தைகள் நடனம் ஆடுவது சகஜம் என நீங்கள்  நினைத்தால் இதை பாருங்கள்,

சாலை ஓரம் இருக்கும் இடத்தில் பெண் ஒருவர் தன் மாணவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார்.அணைத்து மாணவர்களும்  ஆசிரியை செய்யும் நடன அசைவுகளை பின்பற்றி நடனம் அடிக்கிறார்கள்.

மாணவர்கள் முன்,சிறிய மேடை அமைத்து அதன் மீது நின்றுகொண்டு நடனம் ஆடிக்கொண்டு இருக்கும் ஆசிரியை பார்த்தபடி எதிர்புறத்தில் சிறுமி ஒருவர் அந்த பெண் செய்யும் நடன அசைவுகளை, கண்ணாடியின் பிரதிபலிப்பு போல தானும் செய்து நடனம் ஆடி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சிலபேருக்கு சுட்டுபோட்டால் கூட நடனம் ஆட வராது என்பார்கள்.ஆனால் இந்த சிறுமியோ அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சிறுமியின் திறமையை பார்த்து வியக்கும் நெட்டிசன்கள் சிறுமிக்கு  தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.