தந்தைக்கு சாப்பிட நேரமில்லை என தேம்பி அழுத மகள்

406
Advertisement

ஒரு தந்தை தனது சிறு மகளைப் பற்றி கவலைப்படுவது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தாது, ஆனால் ஒரு சிறுமி தனது தந்தைக்காக கவலைப்பட்டு அழும் தருணம் உள்ளதை கறையவைக்கிறது.

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட பதிவு ஒன்றில் , கண்களில் கண்ணீர் உடன் அழும் சிறுமியிடம் அவரது தாய் ஏன் அழுகிறாய் என கேட்கும் பொது அந்த சிறுமி , தந்தை நீண்ட நேரம் சாப்பிடாமல் வேலையில் ஈடுபட்டு இருப்பதால் தன் மனம் வலிப்பதாக கூறுகிறார்.

“பெண்களை சுமையாகக் கருதுபவர்கள், இந்த வீடியோவை பார்க்க வேண்டும்” என்பதற்காக இது பகிரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் , அந்தப் சிறுமி தன் தாயிடம் தன் அப்பா வேலைக்கு செல்வதற்கு முன் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார் , அதன்பின் இரவு உணவு மட்டும் சாப்பிடுகிறார். மதிய சாப்பாடு சாப்பிட நேரம் இல்லை என பகலில் வெறும் வயிற்றில் இருப்பார் என அழுதுகொண்டே கூறுகிறார்.

தந்தையின் வேலைபளு காரணமாக அவரால் மதிய உணவு எடுத்துக்கொள்ள முடியவில்லை என சிறுமியின் தாய் ,சிறுமிக்கு புரியவைக்க முயற்சித்தும். அந்த சிறுமி ” மக்கள் சரியாக நேரத்திற்கு சாப்பிட வேண்டும் அல்லவா ? அவர்களால் சாப்பிட முடிந்தால் என் அப்பாவால் ஏன் முடியாது ? என கேட்கும் சிறுமியை பார்க்கும் பெற்றோர்களின் நெஞ்சத்தை தொட்டு உள்ள இந்த வீடியோவை பல பரபலகளும் கூட பகிர்த்துவருகின்றனர்.