Tuesday, April 29, 2025

“இந்தியன் 2 மாதிரி, திராவிட மாடலும்…” – ஆர்.பி உதயகுமார் பேச்சு

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ”திராவிட முன்னேற்றக் கழகம் 6-வது முறையாக ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளது. 5-ஆம் ஆண்டில் விரைவாக அடியெடுத்து வைக்கவுள்ளது. இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்கள், செய்திருக்கும் சாதனைகளால் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

இந்தியாவில் எந்த மாநிலமும் அடையாத சாதனையை செய்துள்ளோம். 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களே இதனை தெரிவிக்கின்றன. இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026-ல் திராவிட மாடல் 2.0 லோடிங்” எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் பதிலளித்துள்ளார். அவர் பேசியதாவது : இந்தியன் – 2 திரைப்படம் போல தி.மு.க.வின் திராவிட மாடல் – 2 பெயிலியர் மாடல் தான் என அவர் கூறியுள்ளார்.

Latest news