Thursday, September 4, 2025

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரம் தரும் எல்.ஐ.சி : விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டம் என்பதை செயல்படுத்திகொண்டு வருகிறது. இத்திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வியை முழுமையாக தொடர கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் 2025-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு, தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் NCVT அங்கீகரித்த ஐடிஐ நிலையங்களில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொது கல்வி உதவித்தொகை மற்றும் பெண்களுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை என வழங்கப்படுகிறது. பொது கல்வித் உதவித்தொகைக்கு 10-ம் வகுப்பு முடித்து ஐடிஐ, டிப்ளமோ சேர்ந்தவர்கள் மற்றும் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2022-23/2023-24/2024-25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.4,50,000 கடந்திருக்கக்கூடாது.

எவ்வளவு உதவித்தொகை அளிக்கப்படும்?

மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.40,000 வழங்கப்படும். வருடத்திற்கு இரண்டு தவணைகளில் ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும்.

பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.30,000 வழங்கப்படும். அதே போன்று, ரூ.15,000 என இரண்டு தவணைகளில் அளிக்கப்படும்.

பட்டப்படிப்பு, டிப்ளமோ உள்ளிட்ட இதர படிப்புகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.20,000 வழங்கப்படும். ரூ.10 ஆயிரம் என 2 முறை வழங்கப்படும்.

பெண்களுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை கீழ் வருடத்திற்கு ரூ.15,000 அளிக்கப்படும்.

மாணவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். மாணவர்களின் கல்வி முடியும் வரை முழுமையாக உதவித்தொகை அளிக்கப்படும். பெண்களுக்கு சிறப்பு உதவித்தொகை 2 வருடத்திற்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

மாணவர்களின் வங்கி கணக்கு

வங்கி IFSC எண்

வங்கி கணக்கு காசோலை

வருமான சான்றிதழ்

கல்வித்தகுதி சான்றிதழ்கள்

ஆதார் எண்

உயர்கல்வி சேர்க்கைக்கான சான்றிதழ்

விண்ணப்பிப்பது எப்படி?

2025-26 கல்வி ஆண்டில் எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் பெற விரும்பும் மாணவர்கள் https://licindia.in/golden-jubilee-foundation என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News