Wednesday, March 26, 2025

கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம் – உதயநிதி ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், வி.சி.க உட்பட 53 கட்சிகளின் தலைவர் பங்கேற்றனர்.

இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை அமல்படுத்த ஒன்றிய அரசுத் துடிக்கிறது.

இந்த சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோம்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்தக் கூட்டத்தில், அடுத்து வரும் 30 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் தீங்கினை மக்களிடம் எடுத்துச்சொல்வது உட்பட 5 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest news