Friday, March 14, 2025

விஜய் முதலில் இதை செய்யட்டும்- ஆவேசமான விஷால்

விஷால் மக்கள் இயக்க தென் சென்னை மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் இல்ல நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது . இதில் நடிகர் விஷால் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷாலிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் : விஜய் முதலில் ஊடகத்தை சந்திக்கட்டும். ஊடகத்தை சந்தித்தால்தான் ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு, “மாணவர்கள் எந்த மொழி படிக்க விரும்புகிறார்களோ அதை தான் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும். மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதை பெற்றோர்களிடம் கேட்க வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகள் என்ன மொழி படிக்க வேண்டும், அதனால் என்ன பயன் இருக்கிறது என்பதை அறிந்து படிக்க வைக்க வேண்டும் என அவர் பேசினார்.

Latest news