திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவர் மீது ஏறி, சிறுத்தை சாலையை கடந்து சென்றது. இதனை அவ்வழியாக காரில் சென்றவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இதனிடையே சிறுத்தை நடமாட்டத்தால், பைக்கில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், பேருந்து கார்களில் செல்பவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை மூடி செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.