“எதிர்காலத்துக்கு என்ன சேமிச்சு வெச்சிருக்கீங்க…” என பொருளாதார நிபுணர்கள் மக்களை பார்த்து சமீப நாட்களில் கேட்பது ஏதோ நம்மை பயமுறுத்துவதற்காக அல்ல. ஏனெனில் எந்த நேரத்திலும் சேமிப்பு என்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுவதாலேயே இப்படிப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகரித்தே வருகின்றன.
ஸ்டேட் வங்கி பல்வேறு காலகட்டங்களுக்கான நிலையான வைப்புத் திட்டங்களில் பொது குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.00 சதவீதம் வரை வட்டி தருவதோடு மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களுக்கான நிலையான வைப்புத் திட்டங்களில் 4.00 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் கணக்குகளைத் துவங்குகிறது.
இந்தியாவில் நாட்டின் பெரும் பகுதியினர் பாதுகாப்பான முதலீட்டிற்காக Fixed Deposit-ஐ நம்பியுள்ளனர். SBI-யின் அத்தகைய திட்டத்தைப் பற்றி தான் விளக்குகிறது இந்த பதிவு. அதில் நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.29,776 முதல் ரூ.32,044 வரை நிலையான வட்டியை நேரடியாகப் பெற முடியும்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்பு கணக்கை துவங்கலாம். வெவ்வேறு காலகட்டங்களுக்கான நிரந்தர வைப்பு நிதித் திட்டங்களில் பொது மக்களுக்கு ஸ்டேட் வங்கி 3.50 சதவீதம் முதல் 7.00 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது என்பது நல்ல லாபமே.
மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களுக்கான நிரந்தர வைப்பு நிதித் திட்டங்களில் 4 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குவதோடு மட்டுமல்லாமல் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்பு நிதிகளில் SBI பொது மக்களுக்கு 7.00 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டியை வழங்குகிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் இந்த நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், ரூ.29,776 முதல் ரூ.32,044 வரை நிலையான மற்றும் உத்தரவாத வட்டியை பெற முடியும். நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால், அதாவது உங்கள் வயது 60 வயதுக்குக் குறைவாக இருந்தால், SBI-யின் இந்த நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யும் ஒருவருக்கு ரூ.29,776 வட்டியாக கிடைக்கும். மேலும் நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருக்கும் பட்சத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.32,044 நிலையான மற்றும் உத்தரவாத வட்டியை பெற்றுக்கொள்ள முடியும்.