சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், தென்காசியில் விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேர செய்திகள் உணர்த்துவதாகவும் குற்றம்சுமத்தி இருக்கிறார்.
மேலும், பள்ளி மாணவர்கள் இடையே, திமுக ஆட்சியில் வன்முறை போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறியிருக்கும் அவர், விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே, எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லை என்று சாடியுள்ளார். ஆட்சியில் இருக்கப் போகும் நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது அசு கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
