கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கரூரில் நடந்த துயரம் பற்றி நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அவர் கூறியதாவது : இது போன்ற கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். கூட்டம் எப்படி இருக்கும், எந்த பக்கம் போகும் என்பது எதுவும் தெரியாமல் இருக்கும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது.
இறந்தவர்களை திருப்பிக் கொடுக்க முடியாது. மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள், பெண்களால் கடைசி நேரத்தில் ஓட முடியாது. இனியும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்க வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.