கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணமா? தீயாய் பரவும் தகவல்

84
Advertisement

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்பட்டு வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு அவரின் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் கீர்த்தியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

இதற்கிடையே, கீர்த்தியின் பெற்றோர் அவர்களின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று உறவினர்களை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி கீர்த்தி சுரேஷோ அவர் குடும்பத்தினாரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதே போல இரண்டு வருடத்திற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் ஒரு தொழிலதிபரை மணக்க உள்ளதாக தீவிரமாக பேசப்பட்டு வந்த நிலையில், அது வதந்தியாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.