Wednesday, February 18, 2026

விபத்தில் குடும்பஸ்தன்’ பட நடிகை காயம்!!

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்தவர் சான்வி மேக்னா. இதனைத் தொடர்ந்து தமிழில் தனது இருப்பை தக்க வைக்கக்கொள்ள கவர்ச்சி பாதையில் களமிறங்கி இருக்கிறார்.

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற சான்வி மேக்னா விபத்தில் சிக்கியுள்ளார். அதாவது,ஒரு சமையல் தொடர்பான காட்சி படமாக்கப்பட்டபோது, கொதிக்கும் எண்ணெய் தெறித்து சான்வி மேகனா கையில் காயத்தை ஏற்பட்டுள்ளதாம்.

இதையடுத்து சான்வி மேகனா மருத்துவமைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார். இது குறித்து அவர் “விபத்துகள் எதிர்பாராத விதமாக நடக்கத்தான் செய்யும். மீண்டு வருவது நம் கையில் தான் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் சாய் அபயங்கருடன் விழி வீக்குர பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News