உலகளவில் ‘குபேரா’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த ‘குபேரா’ திரைப்படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.17 கோடி வசூல் செய்த நிலையில், மூன்று நாட்களில் மொத்தம் ரூ.49 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழை விட தெலுங்கு மொழியில் தான் இப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது. 

தமிழகத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் 3 நாட்களில் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளது. தெலுங்கில் தற்போது ‘குபேரா’ வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News